கோவிலில் சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்து என்ற இளைஞர்!! பரபரப்பு வாக்குமூலம்!!

 
சிவலிங்கம்

உத்தரப்பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் வசித்து வருபவர்   சோட்டு. இவர் மிக  விரைவில் தனக்கு திருமணம் நடக்க வேண்டும்.   நல்ல மனைவி அமைய வேண்டும் என சிவன் கோவிலுக்கு  சென்று தினசரி வழிபாடு செய்தார். அத்துடன் தனது பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று தினமும் பூஜைகளையும் செய்து வந்தார்.  தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு பரிகாரங்கள், சடங்குகளையும் செய்து வந்தார்.

சிவலிங்கம்


இந்நிலையில் திடீரென கோவிலில் இருந்த சிவலிங்கம் காணாமல் போனது. இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த கிராம மக்கள், சிவலிங்கம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து கோவில் பூசாரி, மஹேவாகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ்

இந்த புகாரின் அடிப்படையில்   உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர்  ஆய்வு செய்தனர். அப்போது, சோட்டு தான் அந்த சிவலிங்கத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய பிரார்த்தனை நிறைவேறாததால் சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பையும் , அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web