போதையில் அரசுப்பேருந்தை ஓட்ட முயற்சித்த இளைஞர்..!! அலறிஅடித்து இறங்கி ஓடிய பயணிகள்!!

 
பயணிகள்

திருப்பதிக்கு தினசரி செங்கல்பட்டில் இருந்து பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.   இந்த பேருந்துகள், இருங்காட்டுகோட்டை, திருத்தணி வழியாக திருப்பதிக்கு செல்கின்றன. இன்று காலை செங்கல்பட்டில் இருந்து 50 பேருடன் அரசு பேருந்துஒன்று திருப்பதி நோக்கி புறப்பட்டது. இந்த  அரசு பேருந்து, திருத்தணி அருகே உள்ள தமிழக - ஆந்திரா எல்லையில் உள்ள உணவகம் ஒன்றில்  உணவுக்காக நிறுத்தப்பட்டது.

விபத்து


ஓட்டுனர், நடத்துனர் மற்றும் ஒரு சில பயணிகள் சாப்பிட உணவகத்திற்கு சென்றனர். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த போதையில் இருந்த இளைஞர் அவரே  ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். இதனை கண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்திற்கு உடனடியாக  விரைந்து வந்தனர்.  போதை ஆசாமியை பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர்.

ஆம்புலன்ஸ்


இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கஞ்சா போதையில் உணவகத்தில் நின்று இருந்த அரசு பேருந்தை இளைஞர் ஓட்ட   முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web