விநாயகர் ஊர்வலத்தில் விபரீதம்.. கோமாவுக்கு சென்ற இளைஞர்!!

 
விநாயகர்

செப்டம்பர் 19ம் தேதி திங்கட்கிழமை இந்தியா முழுவதும்  விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல ஊர்களில் முக்கிய இடங்களிலும் வீதிஓரங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தபட்டன. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்  ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

கோமா


 ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ராஜாம்பேட்டையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  இந்த கொண்டாட்டத்தில் அதே பகுதியில் வசித்து வரும்   கிரண்  உற்சாக மிகுதியால் டிராக்டரின் முன்பகுதியில் ஏறி நின்று, பல்டி அடித்தார். அப்போது, சாலையில் தலை பலமாக மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்


சுற்றி நின்றவர்களால் அவர் மீட்கப்பட்டு  உடனடியாக  கடப்பா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக அவரை திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கோமா நிலைக்கு சென்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web