பேருந்து நிலையத்தில் இளம்பெண் விட்டுச் சென்ற குழந்தை ... பரபரப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு, 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கையில் 6 மாத ஆண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். பின்னர், அங்கு கடை வைத்திருந்த மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்து, “நான் கழிவறைக்கு சென்று விட்டு வருகிறேன்” என்று கூறி சென்றார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த இளம்பெண் திரும்பி வரவில்லை. இதனால் மூதாட்டி பதட்டமடைந்து அங்கிருந்த மக்களிடம் உதவி கோரினார். தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூதாட்டியிடமிருந்து குழந்தையை பெற்று சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், சைல்ட் ஹெல்ப்லைன் அலுவலர்கள் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குழந்தையை விட்டுச்சென்ற இளம்பெண் யார்? குழந்தை அவருடையதா அல்லது வேறு யாருடையதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சோளிங்கர் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
