பைக் வாங்கித் தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... கதறிய ஏழைத் தாய்!!

 
சௌந்திரராஜன்

கேட்பதை எல்லாமே தர வேண்டும் என்பது தான் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு. எதையும் முடியாது என சொல்லிவிட்டால் உடனே மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். கொஞ்சமும் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாத இளைய சமுதாயத்தை தான் பேணி போற்றி பாதுகாத்து வளர்க்கிறோம் என்பது வெட்கப்படவேண்டிய கசக்கும் உண்மை. இவர்களது மன அழுத்தத்தால் பலரும்  அசம்பாவித முடிவுகளை தேடிக்கொள்வது தான் அவலத்தின் உச்சம். அந்த வகையில் பைக் வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவர் தற்கொலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சித்தம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சிவகாமி. இவரது கணவர் ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.  சிவகாமி தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மகனுக்கு வயது 19. இவர் சௌந்தர்ராஜன்.  கூலி வேலைக்கு சென்று வந்துள்ளான்.   கடந்த சில நாட்களாக சௌந்தர்ராஜன் அவரது அம்மா மற்றும் அக்காவிடம் தொடர்ந்து விலை உயர்ந்த பைக்கான கேடிஎம் வாங்கித் தர வற்புறுத்தியுள்ளான். அத்தனை பைக் வாங்க வசதியில்லை.  நேற்று காலை வழக்கம்போல் விலை உயர்ந்த பைக் வேண்டும் என  வீட்டில் சண்டையிட்டு விட்டு வெளியில் சென்று விட்டார்.  

ஆம்புலன்ஸ்


 நேற்று மாலை பல்லடம் உடுமலை சாலையில் உள்ள காட்டுப்பகுதியில்  மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  இளைஞரின்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதில் பைக் வாங்கி தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web