ச்சோ க்யூட்... சிறுமியின் ஆதார் அட்டை போட்டோஷூட்... வைரலாகும் வீடியோ!

 
பார்லேஜி
 

பலருடைய ரேஷன் கார்டுகளிலும், வாக்காளர் அடையாள அட்டையிலும் இருக்கும் புகைப்படம் அவர்களது தானா என்பதைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும். இன்னும் சிலருடைய லைசென்ஸில் கர்ணகொடூரமாக புகைப்படங்கள் பதிவாகி இருக்கும். இந்நிலையில், ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுப்பதற்கு சிறுமி ஒருவரை அவரது பெற்றோர் அழைத்துச் சென்ற நிலையில், புகைப்படத்திற்காக சிறுமி செய்த க்யூட்டான சேட்டைகள் வைரலாகி வருகிறது. 


பலரும் சிறுமி தொடர்ந்து ரீல்ஸ் பார்த்ததாலோ, அல்லது அவரது பெற்றோர், உறவினர் சிறுமியை ரீல்ஸ் வீடியோக்களுக்கு தயார் படுத்தியிருந்ததாலோ புகைப்படம் என்றதுமே சிறுமி இயல்பை மறந்து விடுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.அந்த வீடியோவில், ஆதார் அட்டைக்காக ஆபரேட்டர், சிறுமியின் புகைப்படத்தை எடுக்க முயற்சிக்கும் போது, ​​ஃபிராக் உடையணிந்த சிறுமி, பல்வேறு போஸ்களை வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.

பார்லேஜி

க்யூட்டாக சிரிக்கும் சிறுமி, கன்னத்தில் கையை வைத்து, கைதட்டி, சிறிய நடனத்தைக் கூட வெளிப்படுத்துகிறார்.இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் தோராயமாக 1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. சமூக ஊடக பயனர்கள் அவரை "பார்லே ஜி கேர்ள்" என்று அன்புடன் அழைத்துள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web