மாதம்‌ ரூ.1000 பெற ஆதார் கட்டாயம்…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

 
ஆதார்


 
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை கொண்டுவரவும், மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். இத்திட்டத்தின் படி அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

கல்வி உதவி தொகை

இத்திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ள நிலையில்  தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆதார் கார்டு அவசியம். இந்த தகவலை அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில்  கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.

தமிழ் புதல்வன்

சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆதார் மையங்களில் மாணவர்கள் ஆதார் அட்டை பெறலாம்.  அருகில் ஆதார் மையங்கள் இல்லையெனில் கல்வி நிறுவனங்கள் அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!