ஆதார் இலவச அப்டேட்.. டிசம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!

 
ஆதார்

ஒவ்வொரு இந்திய குடிமகனின் நிரந்தர அடையாளம் ஆதார். இதனை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என   இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.  இந்த அப்டேட்டை வீட்டில் இருந்த படியே  மை ஆதார் போர்ட்டல் வழியாக அப்டேட் செய்து கொள்ள முடியும்.இதனை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள கடைசி தேதி செப்டம்பர் 14 என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆதார்

 தற்போது இதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால் மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதாரை இலவசமாக மை ஆதார் போர்ட்டலில் அப்டேட் செய்ய டிசம்பர் 14ம் தேதி வரை  கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இதனை ஆதார் சேவை மையங்களுக்கு சென்றால் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 


வீட்டிலிருந்தபடியே அப்டேட் செய்வது எப்படி?

பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுப்பது எப்படி?!


அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/  ல் லாக் இன் செய்ய வேண்டும்.அதில்    பெயர்/ பாலினம்/ பிறந்த தேதி/ முகவரி அப்டேட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்ததாக அப்டேட் ஆதார் ஆன்லைன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். முகவரி சான்று, அடையாள சான்று நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் பதிவு செய்த எண்ணுக்கு, சர்வீஸ் ரெக்வஸ்ட் எண் குறுஞ்செய்தியாக வரும். அதை உள்ளீடு செய்து எளிதாக அப்டேட் செய்துகொள்ளலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web