ஆடி வெள்ளி... அம்மன் ஆலயங்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்.. நேற்றிரவே தங்கியிருந்து சாமி தரிசனம்!

இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிந்து, தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். திருச்சி மாரியம்மன், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, பெரியபாளையத்தம்மன், மயிலாப்பூர் கற்பகாம்மாள், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, திருவெற்றியூர் வடிவுடையம்மன் என அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் ஆடி மாதம் முழுவதுமே அதிகரித்துள்ளது.
இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவார்கள். அதுவும் ஆடி வெள்ளி என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை அம்மனை தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு இரவு முதலே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, தங்கியிருந்து இன்று அதிகாலை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா