10 லட்சம் ருத்ராட்சத்தால் அபிஷேகம்.. பக்தர்கள் பரவசம்... !

 
ருத்ராட்சம்

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் வசித்து வருபவர்   திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம். 2  சித்தர்கள் வழிபாடு செய்த கோவில் இது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை  வாய்ந்த இத்திருக்கோவிலில் 5 நிறம் மாறும் தன்மை கொண்ட சிறப்பு பெற்றது.   சிவராத்திரி தினத்தில்  முழு பக்தியுடன் வழிபட்டால் ஶ்ரீபஞ்சவர்ண ஸ்வாமி 5 நிறங்களும் மாறுவதை பக்தர்கள் கண்கூடாக கண்டு செல்வதாக கூறப்படுகிறது.

ருத்ராட்சம்
அத்துடன் இந்த தலத்திற்கு நேரில் வந்து வழிபாடு செய்தால்  திருமண பாக்கியம், நோய் தீர்க்கும் வல்லமை படைத்த ஶ்ரீ பஞ்சவர்ண சுவாமி விஷக்கடிகளுக்கு விபூதி மூலம் வியாதியை சரி செய்யும் சுவாமியாக திகழ்ந்துவரும் திருக்கோயில்.   இந்த கோவிலில் அமைந்துள்ள  ஶ்ரீ பஞ்சவர்ண சுவாமிக்கு 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ருத்ராட்சம்
மேலும் ஸ்ரீ  பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமிக்கு விபூதி அபிஷேகமும் பன்னீர் அபிஷேகமும் நடத்தப்பட்டது.  இந்த அபிஷேக ஆராதனை விழாவில்  திருவள்ளூர் ஈக்காடு புள்ளரம்பாக்கம் ஒதிக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் 1000க்கும் மேற்பட்டோர்  ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் சுவாமியை வழிபட்டு ஓம் சிவாய நாமம் எழுதி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்கள் பிரார்த்தனை செய்தனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web