அடி தூள்... புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள்?

 
புறநகர் ரயில்

சென்னையின் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களுடைய தேவை மற்றும் பணிக்காக தினசரி பயணத்திற்கு பெரும்பாலும் ரயில்களையே நம்பியுள்ளனர். சென்னையில் இருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.   நீண்ட தூரத்தில் இருந்து பணிக்கு வரும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ரயில்

இந்த ரயிலில் குளிர்சாதன பெட்டியை இணைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு  தெற்கு ரயில்வேக்கு மின்சார ரயிலில் குளிர் சாதன பெட்டி இணைக்க பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே  மும்பை மின்சார ரயிலுக்கு சென்னை ஐசிஎப்பில் இருந்து தான் குளிர்சாதன பெட்டிகள் தயாரித்து கொடுக்கப்படுகிறது. அதே போல சென்னை மின்சார ரயிலுக்கும் குளிர்சாதன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ரயில்

முதல்கட்டமாக 2 முதல் 3 பெட்டிகளை இணைத்து சோதனை செய்யப்படும்.  பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக விரிவு படுத்தபப்டும் எனக்  கூறப்படுகிறது.  சோதனை அடிப்படையில் சென்னை பீச்- திருமால்பூர், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்   பகுதிகளுக்கு செல்லும் ரயிலில் குளிர் சாதன பெட்டிகள் பொறுத்தப்படும் என தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web