அதிகாலையில் சோகம்... பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதி விபத்து... 18 பேர் படுகாயம்!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா, மஞ்சபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இன்று பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இன்று அதிகாலை தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருந்து வந்த சரக்கு வாகனம் மோதியதில் 8 வயது சிறுவன் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற செங்கிப்பட்டி போலீசார், காயம் அடைந்த 18 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த மாலா மற்றும் மகமாயி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த மாதம் 17-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் கோயிலுக்குச் சென்ற போது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!