மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் பாய்ந்து 14 சிறுவர்கள் படுகாயம்!

 
ராஜஸ்தான் விபத்து

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இன்று (மார்ச் 8) மகாசிவராத்திரியையொட்டி நடைபெற்ற சிவபாரத ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 14 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் கோட்டாவில் உள்ள எம்பிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டா எஸ்பி அம்ரிதா துஹான் கூறுகையில், "இது மிகவும் சோகமான சம்பவம். காளி பஸ்தியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கலசத்துடன் இங்கு கூடியிருந்தனர், ஒரு சிறுவன் 20-22 அடி குழாயை எடுத்துச் செல்லும் போது உயர் அழுத்த கம்பியை உரசியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. அவரைக் காப்பாற்றும் முயற்சியில் அங்கு இருந்த சிறுவர்கள் செல்லவே அனைவரும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர்.அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதே முதன்மையானது.ஒருவர் 100% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளார்.விசாரணை தொடங்கப்பட்டுள்ளது,இதில் 14 சிறுவர்கள் படுகாயமடைந்தனர் என தெரிவித்தார்.

ராஜஸ்தான் அமைச்சர் ஹீரலால் நாகர் கூறுகையில், "இது மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம். இரண்டு சிறுவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஒருவருக்கு 100% தீக்காயம் ஏற்பட்டது. சாத்தியமான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அலட்சியம் நடந்துள்ளதா என விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web