படப்பிடிப்பில் விபத்து... நடிகர் ஜோஜுவுக்கு படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!

 
ஜோஜு ஜார்ஜ்

தமிழ் திரையுலகில்  ஜகமே தந்திரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ் . இவர் நடிகர் சூர்யாவுடன் ரெட்ரோ, நடிகர் கமல் ஹாசனுடன் தக் லைஃப்  திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இயக்குநராக, ’பனி’ என்கிற படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.அந்த வகையில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ்

இந்நிலையில், நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் வரவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த படத்திற்கான படப்பிடிப்பு  மூணாறில் நடைபெற்ற நிலையில்  நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், தீபக் பரம்போல் உள்பட 6 பேர் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வாகனம் திடீரென பள்ளத்தில் கழிந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கிறது. 

நடிகர் ஜோஜு ஜார்ஜ்

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில்  ஜோஜுக்கு காயம் ஏற்பட்டதாகவும் இன்னும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டிச் சென்றது ஜோஜு தான் என்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தக் லைஃப் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் ஜோஜு ஜார்ஜுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?