பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பிய போது விபத்து... மருமகளும், மாமியாரும் உயிரிழந்த சோகம்!

 
ராகவி

மகனின் முதல் வருட பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியாக திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினர் அன்றைய இரவே பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். காரில் குடும்பத்தினர் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் விபத்திற்குள்ளாகி மருமகளும், மாமியாரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கணவர் மருத்துவமனையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தனது மகனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு புறப்பட்ட நிலையில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மாமியாரும், மருமகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர். 

ராகவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இச்சிப்பட்டி அருகே குட்டையகாடு என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற காங்கயத்தைச் சேர்ந்த மதிவாணன் (28 ) அவருடைய மனைவி ராகவி என்கின்ற ராகவர்தினி (26) மற்றும் மதிவாணனின் தாயார் பாக்கியலட்சுமி (55 ) குழந்தை ஆதிக் ( 01) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், மனைவி ராகவியும், தாயார் பாக்கியலட்சுமியும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மதிவாணன் மற்றும் குழந்தை ஆதிக் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

ராகவி

காங்கேயத்தில் குழந்தை ஆதிக் முதல் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிவிட்டு தாராபுரம் நோக்கி மீண்டும் காரில் வந்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து ஊதியூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிவிட்டு, ஊர் திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் மாமியாரும், மருமகளும் உயிரிழந்தது பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web