மோடி அறிவிப்பு .. தமிழக விபத்தில் பலியான பெண்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம்!!

 
மோடி

தமிழகத்தில் திருப்பத்தூரில் இருந்து பெண்கள் குழு சுற்றுலா சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் லாரி மீது மோதியதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி “தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.  உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு   ரூ. 50,000 வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளார். 

 விபத்து ஸ்டாலின்

 

இந்த கோர விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் பதிவும் நிவாரணத்தொகையும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலகள். அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.  இந்த விபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முதல்தர சிகிச்சையும், நிவாரணத் தொகையாக தலா ரூ50000 வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.  

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டையில் இருந்து 2 வேன்களில் சுற்றுலா சென்றுவிட்டு,  சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  நாட்றம்பள்ளி  சண்டியூர் அருகே வந்து கொண்டிருந்த போது ஒரு வேன் பழுதடைந்து விட்டது.   அதன் காரணமாக அதை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அதே சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்த வேனின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

வேன் லாரி விபத்து

இதில் வேனின் பின்பகுதி அப்பளம் போல் நொறுங்கிவிட்டது.   இந்த கோர விபத்தில், வேனுக்குள் அமர்ந்திருந்த, வேனை விட்டு இறங்கி கீழே சாலையில் ஓரமாக அமர்ந்திருந்த பெண்கள் என 7 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூர் காவல்துறையினர்  விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  7 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உயிரிழந்து கிடந்த ஏழு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.இந்த விபத்துக்கு பிறகு லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார்.  இந்நிலையில் சுற்றுலா சென்றவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web