போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கை... பிரேசிலில் 132 பேர் சுட்டுக்கொலை!

 
போதைப்பொருள்
 

பிரேசிலில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட பெரிய அளவிலான அதிரடி நடவடிக்கையில் 132 பேர் பலியான சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதி லூயிஸ் இனேசியோ லூலா டா சில்வா தலைமையிலான அரசு போதைப்பொருள் கடத்தல் மற்றும் கும்பல் வன்முறைக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக ரியோ டி ஜெனீரோ நகரின் பல பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசாரும் ராணுவ வீரர்களும் இணைந்து ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள் உள்ளிட்ட கனரக உபகரணங்களுடன் நடந்த இந்த அதிரடி நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கும்பல் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பல மணி நேரம் நீடித்த மோதலால் ரியோவின் பல குடியிருப்பு பகுதிகள் முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தன.

முதல் கட்ட தகவல்படி, கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகள் 60 பேர் மற்றும் 4 போலீசார் உள்பட 64 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேடுதல் நடவடிக்கைகளில் மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதால் இறப்போர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது.மோதல் நடைபெற்ற இடங்களில் இருந்து 93 துப்பாக்கிகள், 118 ஆயுதங்கள், மேலும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 113 கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரியோ மாநில ஆளுநர் கிளாடியோ கேஸ்டிரோ கூறியதாவது: “இது ரியோ நகர வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை. போதைப்பொருள் பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டிய அவசியம் இருந்தது” என்றார்.ஆனால் மனித உரிமை அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்து, “போலீசார் அளவுக்கு மீறிய வன்முறை காட்டியுள்ளனர்; உயிரிழப்புகள் குறித்து நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்ததாவது, இரவோடு இரவாக 60 முதல் 70 உடல்கள் பகுதி முழுவதும் வீடுகளின் முன் வைக்கப்பட்டதாகவும், பல பெண்களும் குழந்தைகளும் தங்களது உறவினர்களின் உடல்களை அடையாளம் காண போராடுவதாகவும் கூறுகின்றன.பிரேசில் வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய காவல் நடவடிக்கையாகவும், மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!