பாஜக வெற்றி செல்லாது.. தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
உச்சநீதிமன்றம்

பஞ்சாப் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கு தலைநகராக உள்ள சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அனில் மாசிக் என்பவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். அவர் மேயர் தேர்தலில் 8 கவுன்சிலர்களின் வாக்கு செல்லாது எனக் கூறி பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.


 

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. விசாரணையில் முதல் நாளிலேயே சண்டிகர் மேயர் தேர்தலின் போது, பதிவுச் செய்யப்பட்ட வீடியோ காட்சி, அனைவருக்கும் ஒளிபரப்பி காட்டப்பட்டது. இருதரப்பு வழக்கறிஞர்களிடமும் வாக்குச்சீட்டுகளைக் கொடுத்து, அதில் செல்லாதது என எழுதப்பட்டிருக்கிறதா என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.


சரியாக, ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு ஆதரவாக பதிவாகியுள்ள 8 வாக்குச்சீட்டுகளையும், தேர்தல் அதிகாரி சேர்த்து இருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். தேர்தல் அதிகாரி தனது வரம்பை மீறி செயல்பட்டு தெரிந்தே சுயநலமாக மிகப்பெரிய தவறு செய்திருப்பதாக நீதிபதிகள் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

 முறைகேடாக வெளியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி என்ற அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது. அதே நேரத்தில், மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்ட நிலையில், தேர்தல் நடத்திய விதமே தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்படாமல் போய்விட்டது. எனவே, தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142- ஐ பயன்படுத்தி தீர்ப்பினை வழங்குவதாகக் கூறிய தலைமை நீதிபதி, ஆம் ஆத்மி கவுன்சிலர் மேயராக வெற்றி பெற்றார் என்று உத்தரவுப் பிறப்பித்தார்.

சண்டிகர்

தேர்தல் ஜனநாயகத்தின் செயல்முறையை சூழ்ச்சிகளால் முறியடிக்க அனுமதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஜனநாயகத்தை பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தேர்தல் நடத்திய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவுச் செய்ய உத்தரவிட்டதுடன் பொய்யான தகவல்களைத் தெரிவித்ததற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web