அதிரடி ... கார்டு இல்லாதவர்களும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெற்று கொள்ளலாம் !

 
ரேஷன்

தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. 2021 முதல் கடந்த ஆண்டு வரை சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது மகளிர் உரிமைத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் பல புதிய நலத்திட்ட உதவிகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் தற்காலிகமாக  குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி  நிறுத்தி வைக்கப்பட்டது.

ரேஷன் விரல் பதிவு கைரேகை


 இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வந்தன. இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு 45409 ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு  புதிய குடும்ப அட்டை இல்லாத காரணத்தாலேயே   பொருள்கள் தரப்படவில்லை.  

ரேஷன் சர்க்கரை

தற்போது குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதால் இதனை காண்பித்து ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.  ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்புக்குப் பிறகு, பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web