துப்பாக்கிச்சூடு பயிற்சியில் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ!

 
அஜித் துப்பாக்கி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனம் ஈர்த்து வருகின்றன.

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அஜித் குமார் அதிக நேரத்தை கார் ரேஸிங்கில் செலவிட்டு வருகிறார். அவர் நடத்தும் தனியார் கார் பந்தய குழு துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளது.

அவரின் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் முழுக்க கமர்ஷியல் மசாலா படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பிற்கு முன், அண்மையில் அஜித் தனது குடும்பத்தினருடன் பாலக்காடு பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்த புகைப்படமும் வைரலானது.

இந்நிலையில், திருப்பூர் கொங்குநாடு ரைபிள் கிளப்பின் நிறுவனர் செந்தில் குமாருடன் சேர்ந்து, அஜித் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இலக்கை கவனமாக நோக்கி துப்பாக்கி சுடும் அவரது காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அஜித்

அஜித்தின் ஒவ்வொரு புதிய தோற்றமும் ரசிகர்களிடையே கொண்டாட்டமாக மாறி வரும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு வீடியோவும் தற்போது டிரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?