நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி...ரசிகர்கள் அதிர்ச்சி!

 
அஜித்

நடிகர் அஜித்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அஜித்

நடிகர் அஜித்துக்கு என்னாச்சு என்பது குறித்து அவரது மேலாளர் சுரேஷ் குமாரிடம் விசாரித்த போது, வழக்கமான பரிசோதனைகளுக்காக நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இன்றே சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் தகவல் தெரிவித்தார். மகிழ்திருமேனி இயக்கு வரும் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் தல நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத்குமார். இவரதுநடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அவரது 62 வது படமான விடாமுயற்சியை  பிரபல லைகா நிறுவனம் தயாரிக்கிறது.  மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில்   திரிஷா, ஆரவ், ரெஜினா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன்  அனிருத் இசையமைப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. 

அஜீத் 

  அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில்   90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.  கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில்  எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். ஒரு மாதமாக   குடும்பத்தினருடன் நேரத்தை செலவளித்து வந்தார் அஜித். சமீபத்தில்  நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தநாளை சென்னையில்   மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா ஆகியோருடன் கொண்டாடினார். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.   

நடிகர் அஜித் தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனை இது குறித்து  அஜீத் உடலுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை  , வழக்கமான பரிசோதனை செய்துகொள்ளவே அஜித் அங்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   பரிசோதனைகள் முடிந்து ஓரிரு நாளில் அஜித் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 

From around the web