கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: நடிகர் அஜித்குமார் கருத்து

 
கரூர் அஜித்

கரூரில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் தனது கருத்தை யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கரூர் விஜய்

அதில் அவர் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் பல விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் அந்த விபத்துக்கு ஒருவரே, குறிப்பாக விஜய் மட்டும் பொறுப்பல்ல. நாம் எல்லோரும் இணைந்தே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களின் அளவுக்கு மீறிய அன்பும், அதை ஊக்குவிக்கும் சில நிகழ்வுகளும் இத்தகைய துயரங்களை ஏற்படுத்துகின்றன. கூட்டத்தின் வெறிச்செயலால் சினிமா துறையே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

மீடியாவும் இதற்கு ஒரு காரணம் தான். ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பற்றிய ரசிகர்களின் செயற்பாடுகளை பெரிதாக்கி காட்டுவது, அவர்களின் மனநிலையை பாதிக்கிறது. ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்துவது சரி. ஆனால் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

கரூர்

நான் ரசிகர்கள் அளிக்கும் அன்புக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால், அந்த அன்பின் காரணமாகவே இன்று என் குடும்பத்துடன் வெளியில் செல்வதும், என் மகனை பள்ளிக்குச் சென்று விடுவதும் முடியாத நிலை உள்ளது” என்று அஜித் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?