அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் அருண் விஜய் ரத்த தானம்!
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் அருண் விஜய், அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ஆவடியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பங்கேற்றார். இளைஞர்களுடன் இணைந்து ரத்த தானம் செய்த அவர், “உதிரம் கொடுத்து உயிரை காப்போம், மரங்கள் நட்டு மண்ணை காப்போம்” எனும் செய்தியையும் மக்களுடன் பகிர்ந்தார்.
Actor Arun Vijay | Blood Donation | ரத்த தானம் செய்த அருண் விஜய்.. நெகிழ்ச்சி செயல்#arunvijay | #blooddonation | #chennai pic.twitter.com/LYW4kN9C6n
— Thanthi TV (@ThanthiTV) October 12, 2025
அருண் விஜய் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து வித்தியாசமான கதாபாத்திரங்களை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ளார்.

அருண் விஜய் நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
