நடிகர் சிரஞ்சீவி போலீசில் புகார்... ஆபாச வீடியோக்களால் அதிர்ச்சி!

 
சீரஞ்சிவி
 

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகரும், பிரபல அரசியல்வாதியுமான சிரஞ்சீவி, ஆபாச மார்பிங் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருவதாகக் கூறி, ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது புகைப்படங்களை மாற்றி, ஆபாசமான காட்சிகளில் ஈடுபடுவது போல போலியான வீடியோக்கள் உருவாக்கப்பட்டு, பல இணைய தளங்களில் பரப்பப்படுகின்றன என சிரஞ்சீவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது மரியாதை குலைக்கப்படுவதோடு, பொதுமக்களிடையே தவறான புரிதல் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டம், இந்திய குற்றச் சட்டம் (IPC) மற்றும் பெண்களின் அநாகரிக சித்தரிப்பு (தடை) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட இணைய தளங்கள் மற்றும் வீடியோ உருவாக்கியவர்களை அடையாளம் காணும் பணியில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த போலி வீடியோக்கள் எங்கு உருவாக்கப்பட்டன, யார் பதிவேற்றினர், எந்த டிஜிட்டல் தளங்கள் மூலம் பரப்பப்பட்டன என்பதையும் கண்டறிய போலீசார் விசாரித்து வருகின்றனர். அவை இணையத்திலிருந்து உடனடியாக நீக்கப்படுமாறு சைபர் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பிரபலங்களின் தனிமனித உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற ஆபாச மார்பிங் சம்பவங்களை கடுமையாக தடுக்க வேண்டும் என்றும் திரையுலகில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!