நடிகர் கருணாகரன் தந்தை திடீர் மரணம்... திரையுலகினர் இரங்கல்!
பிரபல குணசித்திர, நகைச்சுவை நடிகர் கருணாகரனின் தந்தை இன்று காலை காலமானார். அவருக்கு வயது 77. கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் காலமானார். இன்று மாலை சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கருணாகரனின் தந்தையும், கேபினட் செயலக சிறப்புப் பிரிவின் ஓய்வுபெற்ற அதிகாரியான காளிதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். “தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை இன்று உயிரிழந்தார் ” என்று இந்த துயரமான செய்தியை நடிகர் கருணாகரன் கனத்த இதயத்தொடு பகிர்ந்துள்ளார்.

இன்று மாலை 3 மணி அளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் இவரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து, நடிகர் கருணாகரனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
