நடிகர் நாசரின் தந்தை காலமானார்.. . திரையுலகினர் இரங்கல்!!

 
நாசர்

நடிகர் சங்கத் தலைவர்  நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா.இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 95. இவரது சொந்த ஊரான செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள இல்லத்தில் மாபுப் பாஷா காலமானார்.தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர் நாசர். இவரது தந்தை செங்கல்பட்டு மாவட்டத்தில்  நகைகளைப் பாலிஷ் செய்யும் தொழில் செய்து வந்தார்.

நாசர்

 நாசரின் தந்தை மெகபூப் பாஷா, தனது மகனை நடிகனாக்கி அழகு பார்க்க விரும்பினார். தந்தையின் ஆசைக்காக நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக கொஞ்சமும் விருப்பமில்லாமல் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார் நாசர். அதன் பின்னர், நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு, பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால்  தாஜ் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக பணிக்கு சென்றார்.  மீண்டும் அவரின் தந்தை அவரைக் கடுமையாகத் திட்டி, நடிக்க வாய்ப்பு தேடி முயற்சிக்க சொன்னார்.

நாசர்


பலமுறை வேண்டாம் என மறுத்து ஒதுக்கி தவிர்த்துவிட்டுச் சென்ற நடிப்பு நாசரின் தனிப்பெரும் அடையாளமாக இன்றைக்கு திகழ்கிறது எனில் அதற்கு காரணம் அவரது தந்தை தான். நகைகளை பாலீஷ் செய்யும் தொழில் செய்து வந்த ஏழைத் தந்தையின் கனவு, தன் மகன் நாசரை இந்திய சினிமாவின் நடிகராக உயரவைத்தது என்றால் மிகையில்லை.  இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், நட்சத்திரங்கள், முண்ணனி நடிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!