மீண்டும் தந்தையானார் பிரபுதேவா.. குடும்பத்தில் முதல் பெண் குழந்தை!

 
பிரபுதேவா

தமிழ் திரையுலகில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என கலக்கி வருபவர் பிரபுதேவா. பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துள்ளார். இவர், 1995ஆம் ஆண்டு ரமலத் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபுதேவா - ரமலத் தம்பதி இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் அவர் ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பின்னர் நடிகை நயன்தாராவுடன் காதல்வசப்பட்டார். இந்த காதல் விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் புயலை கிளப்பயிது. ஆனால் இந்தக் காதல் கைகூடவில்லை.

பிரபுதேவா

அதன்பின்னர் பிரபுதேவா தனிமையில் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்புக்காக மும்பைக்கு சென்றிருந்தார். அங்கு முதுகுவலிக்காக மருத்துவமனை சென்றபோது, பிசியோதெரபிஸ்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பின்னர் பேசத்தொடங்கிய பிரபுதேவா - டாக்டர் ஹிமானி இடையே காதல் மலர்ந்தது.

பின்னர் இருவீட்டார் முன்னிலையில் இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. அதன்பிறகு ஏப்ரல் மாதம் பிரபுதேவா, ஹிமானி சிங் உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவந்த புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில், பிரபுதேவா-ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா

இந்த பெண் குழந்தை பிரபுதேவாவுக்கு மட்டுமின்றி அவர்களின் வம்சத்துகே தேவதையாகவும், மகாராணியாகவும் உள்ளார். ஏனெனில் பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டருக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என மூன்றுபேரும் ஆண் மகன்கள்.  அதேபோல் பிரபுதேவாவின் முதல் மனைவியான ரமலத்துடன் வாழ்ந்த போது மூன்று மகன்கள்தான். மேலும் பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத்துக்கும் ஆண் வாரிசுகள்தான் உள்ளனர். இந்த சூழலில் பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் அவர்களது குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!