படப்பிடிப்பில் விபத்து… நடிகர் சல்மான்கானுக்கு எலும்பு முறிவு!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நடிகர் சல்மான் கானுக்கு விபத்து ஏற்பட்டு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் முருகதாஸ் நடிகர் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வருகிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகாவும், வில்லனாக நடிகர் சத்யராஜும் நடித்து வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது.
ரூ.15 கோடி செலவில் தாராவி போன்ற செட் அமைத்து, படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது கால் இடறி விழுந்ததில் அவரின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஓய்வெடுக்காமல் அவர் முருகதாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். ஏற்கெனவே கதாநாயகி ராஷ்மிகாவுக்கு கடந்த மாதம் விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது கதாநாயகன் சல்மான் கானுக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
