விக்ரம் படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பிரபலமானவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து சியான்62 வது படத்தை இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இயக்குகிறார். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றுகிறார்.
We are blessed to have a @iam_SJSuryah joins the cast of @chiyaan's #Chiyaan62 – we warmly welcome you to the energetic team sir
— HR Pictures (@hr_pictures) February 9, 2024
An #SUArunKumar film
An @gvprakash musical @hr_pictures @riyashibu_ @shibuthameens @propratheesh @vamsikaka @nareshdudani @proyuvraaj pic.twitter.com/wb07aHDx7J
இவர் இதற்கு முன்பு பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இந்நிலையில் படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் எஸ்.ஜே.சூர்யா விக்ரமின் 62வது படத்தில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இதுக்குறித்து HR பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, எஸ்.ஜே.சூர்யா, நீங்கள் எங்களுடன் இணைந்தது பாக்கியமாக கருதுகிறோம் . உங்களை சியான்62 படக்குழு வெகுவாக வரவேற்கிறது என பதிவிட்டுள்ளனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க