நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடக்கம்... பெயர் வெளியீடு...!

 
விஜய்

 
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக சமீபகாலமாக  செய்திகள் வெளியாகி வருகிறது.  இந்நிலையில் இன்று அவரது கட்சி உதயமாகி உள்ளது. அதன்படி கட்சி பெயர் - ‘தமிழக வெற்றி கழகம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதற்காக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து தமிழகம்  முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. இந்நிலையில்  இன்று டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளனர். இது குறித்த  ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து உள்ளனர்.  இந்நிலையில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கும் வகையில் புஸ்ஸி ஆனந்த் இன்று நேரில் சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

உன்னால் முடியும்

அவர் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   TVK Vijay என்ற பெயரில் தனியாக சமூக வலைதளக் கணக்குகளும்  தொடங்கப்பட்டு உள்ளன. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்  நடிகர் விஜய்யின் அரசியல் கட்சிக்கு ”தமிழக வெற்றி கழகம்” என   வைக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க