இயக்குநராகும் நடிகர் விஜய் மகன்!! ஹீரோ அப்பா கிடையாது....

 
ஜேசன் சஞ்சய் விஜய் சேதுபதி

இளையதளபதியாக தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவரை முதன் முதலில் சினிமாவில் அவரது தந்தை  தான் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி இன்று தனக்கென பெரும்  ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். அவர்  தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து விட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகிறார்.

விஜய் மகனுடன்
இந்த படத்தின் தொடக்க பணிகளுக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். முதல் படமே லைகா போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கமிட் ஆகி உள்ளார்.   லைகா நிறுவனர் சுபாஸ்கரனை சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு முன் சில குறும்படங்களை ஜேசன் சஞ்சய்   தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.  

ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான்.   லைகா நிறுவனம் இதுகுறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  விஜய்யின் மகன் சஞ்சய் முதல் படத்திலேயே தந்தையை நடிக்க வைக்காமல் வேறு நடிகரை வைத்து இயக்க இருப்பது திரைத்துறையினர்  பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. விரைவில் விஜய் சேதுபதி  நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web