”அரசியலில் ஈடுபடுவதே மக்களுக்கு நன்றிக்கடன்”... நடிகர் விஜய் சினிமாவிலிருந்து ஓய்வு...?!

தமிழ் திரையுலகில் இளையதளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் சமீபகாலமாக பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகிறார். 234 தொகுதிகளிலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் இவை அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay pic.twitter.com/ShwpbxNvuM
— TVK Vijay (@tvkvijayoffl) February 2, 2024
இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்திலும், ரசிகர்களிடையும் புது உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.
என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்து விட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘The Goat' படத்தை முடித்துவிட்டு பின்பு முழுமையாக விஜய் அரசியல் பணிகளில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க