நடிகர் விஷ்ணுவிஷால் 2வது திருமணத்திற்கு போட்ட கண்டிஷன்!

 
விஷ்ணுவிஷால்

 சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் லால்சலாம் திரைப்படம்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது  இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் தன்னுடைய விவாகரத்து மற்றும் 2 வது திருமணம் குறித்து பதிவிட்டுள்ளார்.  கிரிக்கெட் விளையாட்டு வீரராக ஆசைப்பட்டவட் விஷ்ணு விஷால்.  ஒரு சில காரணங்களால் கிரிக்கெட் பயிற்சியை விட்டே முழுமையாக விலகிவிட்டார். விஷ்ணு விஷால் ஐடி துறையில் பணிபுரிந்து வந்த   நிலையில், பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அந்த வகையில் 2009 ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விஷ்ணுவிஷால்

முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்ததால், அடுத்தடுத்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வெள்ளன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், போன்ற படங்களில் நடித்துள்ளார்.   நீர்ப்பறவை படத்தில்  துணை இயக்குனராக பணிபுரிந்த  பிரபல நடிகர் நடராஜன் மகள் ரஜினியை காதலித்த விஷ்ணு விஷால் அவரையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்ற மகன் ஒருவரும்  உள்ளார். 2010 ல்  ரஜினியை காதலித்து கரம் பிடித்த விஷ்ணு விஷால் 2018 ல்  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.  இது குறித்து  கொடுத்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்கிற முடிவை நான் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் கேட்கும்போது கூட அவர்தான் என்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என கூறினார்.  

விஷ்ணுவிஷால்

பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ரஜினியை பிரிந்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் மீண்டும் திருமணம் செய்து கொள்வேன் என  நினைத்து கூட பார்க்கவில்லை.  ஜுவாலா கட்டா  மிகவும் பாசிட்டிவான பெண் .  என்னுடன் பழக துவங்கியதுமே எனக்கு மகன் ஒருவன் இருப்பதையும் நான் இனி திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்பதையும் தெளிவாக கூறியும்  அவர் என்னை பிடித்திருக்கிறது என தனது காதலை வெளிப்படுத்தினார்.    அவரும் ஒரு விவாகரத்தான பெண்தான் அவருக்கும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இருந்தது, அதேபோல் ஜுவாலாவின் மென்மையான குணம் என்னைக் கவர்ந்தது.  மேலும் ஜுவாலா கட்டாவிடம் திருமணத்திற்கு முன்பே என்னுடைய மகனுக்காக மீண்டும் நான் ரஜினியுடன் சென்றால் என்ன செய்வாய் என்று கேட்டேன்? அதற்காக அதுதான் என்னுடைய தலையெழுத்து என்றால் நான் என்ன செய்ய முடியும் எனக் கூறியுள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web