நடிகர் யோகிபாபு திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம்!

தமிழகத்தில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு கோவில் கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமியை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அவ்வப்போது வருகை தருவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தனது 39வது பிறந்தநாளையொட்டி பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு, அவரது மனைவி மற்றும் மகளுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது அவரது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுததுக் கொண்டனர்.
கோவிலில் அமைந்துள்ள மூலவரான முருகன் மற்றும் பெருமாள் சன்னதி, தட்சிணா மூர்த்தி சன்னதி உட்பட அனைத்து சன்னதிகளிலும் நின்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது கோயில் குருக்கள் யோகிபாபுவுக்கு மாலை மற்றும் சால்வையை அணிவித்து, முருகப்பெருமானின் வேல் அடங்கிய பிரசாதத் தட்டை வழங்கினர். தொடர்ந்து செல்பி கேட்ட தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களை அருகில் அழைத்து அனைவருடனும் சிரித்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்து, அனைவருடனும் இயல்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டது பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா