நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணம்!
தமிழ் திரையுலகில் மதராசப்பட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0, மிஷன் சாப்டர் 1 உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தி, ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். இங்கிலாந்தை பிறப்பிடமாக கொண்ட நடிகை எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார்.
திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் கடந்த ஆண்டு பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமிஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலன் எட்வர்டு வெஸ்ட்விக்கை நடிகை எமிஜாக்சன் திருமணம் செய்துகொண்டார்.
இருவரின் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. எமி ஜாக்சனின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் எட்வர்டு - நடிகை எமி ஜாக்சன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!