நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்.. விமர்சித்த நடிகை.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

 
விஜய்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழும் தளபதி விஜய் பிப்ரவரி 2ஆம் தேதி தனது "தமிழக வெற்றிக் கழகம்" கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும்  படத்தை முடித்துவிட்டு தனது திரையுலக வாழ்க்கையை முடிக்கப் போவதாகவும் தெரிவித்தார். தனது 69வது படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் இணையவுள்ள தளபதி விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜகவின் அண்ணாமலை, திமுகவின் உதயநிதி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை கஸ்தூரி, தளபதி விஜய்யின் அரசியல் வருகை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், காவி கொள்கை கொண்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், ஜோசப் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதேபோல் சிறுபான்மை மக்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சில விஷயங்களைப் பேசினார்.

Actress Kasthuri Heated tweet after her speak about vijay political entry ans

ஜோசப் விஜய் குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது கருத்துக்கு ட்விட்டர் பயனர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய கஸ்தூரி,  விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா? என பதிவிட்டுள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web