அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!

 
காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் இன்று அதிமுகவில் இணைந்தார்.
பாஜகவில் இருந்துக் கொண்டே, தமிழக பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என போர்க்கொடி தூக்கி, சர்ச்சையைக் கிளப்பிய நடிகை காயத்ரி ரகுராம், தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வந்தார்.


இந்நிலையில், கடந்த வருடம் இதே ஜனவரி மாதத்தில், நடிகை காயத்ரி ரகுராமின் கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக பாஜகவில் இருந்து ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதற்கடுத்த சில மாதங்களிலேயே நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் பாஜகவுக்கு எதிராகவும், அண்ணாமலைக்கு எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார் காயத்ரி. அதேசமயம், தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். இதனால், அவர் திமுகவில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் பேசப்பட்டது.

இபிஎஸ்


அவரும் முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திமுக அல்லது விசிகவில் இணையத் தயார் எனக் கூறியிருந்தார். இப்படியான சூழலில்தான் அவர் இன்று யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு அதிமுகவில் இணைந்துள்ளார். ’எடப்பாடியார் என்னும் ஆளுமை தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை’ என அதிமுக அவரை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web