பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது!

 
ஜெயலட்சுமி

தமிழ் திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர் சினேகன். இவர் தன்னுடைய பெயரிலேயே  "சினேகம் அறக்கட்டளை" என்ற பெயரில் சேவை அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.  தன்னுடைய அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி   பொது மக்களிடம் பணம் வசூலித்ததாக பாஜக நிர்வாகியான நடிகை   ஜெயலட்சுமி மீது 2023ல்  சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்திருந்தார்.

சினேகன்

இந்த புகாரின் அடிப்படையில்  நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.   தம் மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்து தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக   பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமியும்  புகார் அளித்தர்.  இதன் அடிப்படையில் சினேகன் மீதும் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜெயலட்சுமி
இந்த வழக்கை ரத்து செய்ய  சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன்  மீதான மனு பிப்ரவரி 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. சினேகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  ஸ்ரீதர்   தனது "சினேகம் பவுண்டேஷன்" என்ற பெயரை ஜெயலட்சுமி தான் தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்.  அதே சமயத்தில்  சினேகன் மீது பொய்யாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் சினேகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக நீதிபதி உத்தரவு  பிறப்பித்தார்.    இன்று காலை 9.30 மணி முதல் சென்னை அண்ணா நகர் திருமங்கலம் வெல்கம் காலனி பகுதியில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் நீதிமன்ற அனுமதி உடன்   10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில்  நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web