மணிப்பூர் சம்பவம் வேறு, கரூர் சம்பவம் வேறு.. நடிகை குஷ்பு பேட்டி!

 
குஷ்பூ
 

மணிப்பூர் சம்பவத்துக்கு நானே தலைகுனிகின்றேன் என்று கூறிய நடிகையும், தமிழக பாஜக துணைத்தலைவருமான குஷ்பு, மணிப்பூர் சம்பவம் வேறு, கரூர் சம்பவம் வேறு என்று கூறினார்.

கரூர் விஜய்

கரூரில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திஅய் நிலையில், இது குறித்து  பலதரப்பு விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்து பாஜக துணைத் தலைவர் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “மணிப்பூர் கலவரம் முடிந்துபோன விஷயம். அதையும் கரூர் சம்பவத்தையும் ஒப்பிட்டு பேச முடியாது” என்றார். 

கரூர் விஜய்

மேலும் பேசிய அவர், “நம்ம பக்கத்து வீட்டில் இதுபோன்ற சம்பவம் நடந்தாலே நம் மனது பதறிப் போகும். மணிப்பூர் சம்பவம் வேறு, கரூர் சம்பவம் வேறு. மணிப்பூர் சம்பவத்துக்கு நானே தலைகுனிகின்றேன். ஆனால் அதை கரூரோடு ஒப்பிடுவது சரியல்ல. விஜய் விஷயத்தில் ஏன் என நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால் ஏன் கேள்வி கேட்டாலே, முதலமைச்சர் Mute Mode-க்கு போய்விடுகிறார்” என்று கூறினார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?