நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது!! பரபரக்கும் திரைத்துறை வட்டாரங்கள்!!

 
மகாலட்சுமி

 
சென்னையில் வசித்து வரும்   பாலாஜி கபா என்பவர் மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட்  நிறுவனர். இவர்  சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில்  2020ல்  லிப்ரா புரொடக்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்  சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்    நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க இருப்பதாக கூறினார். இத்திட்டத்தின்  மதிப்பு 200 கோடி .  தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என  கூறினார்.

விஜே நடிகை மகாலட்சுமி

அந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களையும் காட்டினார். அதனை நம்பி அவரிடம் 16 கோடி முதலீடு செய்தேன். ஆனால்,அவர் பவர் ப்ராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமல் ஏமாற்றியதால் தான் கொடுத்த பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டேன். இதுவரை பணமும் திரும்பவில்லை அத்துடன் மிரட்ட்லும் விடுத்து வருவதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து அதை உண்மை என  நம்ப வைத்து பாலாஜி கபாவிடம் 16 கோடி ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

மகாலட்சுமி ரவீந்தர்
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸர் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  அத்துடன் அசோக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  ஏற்கனவே அண்ணா நகர்  அமெரிக்க வாழ் இந்தியரான விஜயிட ரூ20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web