நடிகை நிலாவுக்கு நாளை மறுநாள் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்!

 
நிலா

நடிகை நிலா, தனது 40வது வயதில் காதலனைத் திருமணம் செய்து கொள்கிறார். குளிப்பதற்கு மினரல் வாட்டர் தான் வேண்டும். செட் போட்டிருக்கும் குளத்துல பாட்டில் பாட்டிலா மினரல் வாட்டர் வாங்கி நிரப்புங்க என தென்காசியில் படப்பிடிப்பின் போது தகராறு செய்து, அதன் பிறகு பெரியளவில் வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர். 

அறிமுகமான போது, நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினர் என்கிற காஸ்ட்லி விசிட்டிங் கார்டோடு அறிமுகமானார் மீரா சோப்ரா. இத்தனைக்கும் பிரியங்கா சோப்ரா அப்படி எந்த படப்பிடிப்பிலும் பந்தா செய்தது கிடையாது. 2005 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவின் தமிழ் திரைப்படமான அன்பே ஆருயிரே படத்தில் நிலாவாக அறிமுகமானார். அதன் பிறகு மருதமலை, ஜாம்பவான், லீ போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபோது டெல்லி திரும்பிய அவர் தந்தையின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘சபத்’ படத்தில் நடித்தார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். 40 வயதான மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த மும்பை தொழிலதிபரான ரஷீத் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஜெய்ப்பூர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் வரும் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். திருமணத் தகவலை மீரா சோப்ரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web