நடிகை ராஷ்மிகா ரகசிய நிச்சயதார்த்தம்.. பிப்ரவரியில் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து!
நடிகை ராஷ்மிகா - நடிகர் விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் நேற்று காலை ரகசியமாக மிக நெருங்கிய உறவினர்கள் மத்தியில் விஜய் தேவரகொண்டா வீட்டில் நடந்து முடிந்தது. இந்த ஜோடி வரும் பிப்ரவரியில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது. ரசிகர்களும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வைரலாக்கி வந்தனர். ஒரே வீட்டில் இருவரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடியதையும் ரசிகர்கள் கணித்து, இருவரும் காதலித்து வருவதாக ஆரூடம் சொல்லி வந்தனர். ஆனாலும் அவர்கள் தங்கள் காதலை பகீரங்கமாக அறிவிக்காமல் இருந்து வந்தனர்.

இந்த ஜோடி ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்றது, ஜோடியாக சுற்றுவது போன்ற புகைப்படங்களும் வைரலாகி வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு தெலுங்கு திரையுலகையும் தாண்டி வைரலாகி வந்தது. இந்நிலையில் நேற்று காலை நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் வைத்து ரகசியமாக இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருமண நிச்சயதார்த்த விழாவை நடத்தி இருக்கின்றனர். இதில் ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.

விஜய் தேவரகொண்டா -ரஷ்மிகாவின் திருமணம் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில் முதன்முறையாக சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு இருவருக்கும் இடையேயான மெகிஸ்ட்ரி வொர்க்கவுட்டாகி தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஜோடி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
