ரஜினிகாந்த் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் ஆச்சரியப்படுத்தும்... நடிகை ரித்திகா சிங்!
''இறுதிச்சுற்று'' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் ரித்திகா சிங். மாதவன் நடிப்பில் வெளியான அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அவர் '' திரையுலகில் உள்ள சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் எனது மனதில் எப்போதும் இருக்கும். அத்தகைய ஒரு நடிகர்தான் ரஜினிகாந்த். அவர் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும்'' என தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
