நீச்சல் உடையில் நடிகை சாய் பல்லவி... ரசிகர்கள் கொந்தளிப்பு!
நீச்சல் உடையில் நடிகை சாய் பல்லவி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தில் சாய்பல்லவியின் படத்தை உருவாக்கி பரப்பும் விஷமிகளுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக ராஷ்மிகா உட்பட பல நடிகைகளின் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியாக ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரப்படுகிறது.
அமரன் படத்தில் ஸ்கோர் செய்த நடிகை சாய் பல்லவி, இந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, என பலமொழிகளில் நடித்துக்கொண்டிருக்கும் சாய் பல்லவி, குடும்பபாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார். நேற்று கலைமாமணி விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சாய்பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலை ஏற்படுத்தி வருகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலி புகைப்படக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து பதிவிட்டுள்ளனர்.

சமீப காலமாக ராஷ்மிகா உட்பட பல நடிகைகளின் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியாக ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகை சாய்பல்லவியின் புகைப்படங்களும் போலியாக வெளியிடப்பட்டு, பகிரப்பட்டு வருவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
