அந்த நடிகையை கெஸ்ட் ஹவுஸில் காப்பாற்றினேன்..” நடிகை ஷகீலா பகீர் பேட்டி!
மலையாள திரையுலகில் நிறையபேர் அதிகாரம் செலுத்துகிறார்கள்... ஆனாலும் மோகன்லால், மம்முட்டி அதில் முக்கியமானவர்கள். அந்த நடிகையைக் கெஸ்ட் ஹவுஸில் இரவு நேரத்தில் நான் தான் காப்பாற்றினேன்’ என்று அதிர வைத்திருக்கிறார் நடிகை ஷகீலா. ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது நடிகை ஷகீலா கொடுத்திருக்கும் பேட்டி பரபரப்பை மேலும் பற்ற வைத்திருக்கிறது.
'படத்தின் பெயர் என்னவென்று நினைவில் இல்லை. அந்த படத்தில் கலாபவன் மணி இருந்தார். படத்தில் நான் பணிப்பெண்ணாக நடித்திருந்தேன். நடிகை ரூபஸ்ரீ கதாநாயகியாக நடித்திருந்தார். நான் அவளுக்கு எதிர் அறையில் இருந்தேன். அவள் என்னிடம் வணக்கம் கூட சொல்லவில்லை. நானும் என் தம்பியும் மேக்கப் மேனும் இரவு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது, அறையை விட்டு வெளியே வரச் சொன்னார்கள். நாங்கள் எங்கள் கதவைத் திறந்தோம். எதிரே நடிகை ரூபஸ்ரீயின் அறைக் கதவை யாரோ தட்டிக் கொண்டிருந்தனர்.
அவர்களை நான் அங்கிருந்து கிளம்பிப் போகச் சொன்னேன். அந்த நபர் என்னைப் பார்த்துக் கோபமாகக் கத்தினார், இறுதியாக நாங்கள் அந்த இரவு முழு கெஸ்ட் ஹவுஸ் கதவுகளையும் பூட்ட வேண்டியிருந்தது.அமெரிக்கன் அச்சாயன் என்று ஒருவன் இருந்தான். நல்ல நபர். அவனை அழைத்து, அதிகாலையில் அவளை இங்கிருந்து பத்திரமாக காப்பாற்றி வழியனுப்பச் சொன்னேன். பின்னர் விடிந்ததும் அடுத்தநாள் காலை அவளை ரயில் நிலையத்தில் இறங்கி விட்டு விட்டோம். நடிகை ரூபஸ்ரீயின் ஒரு பகுதி படப்பிடிப்பு முடிந்ததும், அந்த நபர் ரூபஸ்ரீயைத் தொந்தரவு செய்ய முயன்றுள்ளான்.
நடிகைகள் ரேஷ்மா மற்றும் மரியாவை சுரண்ட முயற்சி நடந்ததாகவும் ஷகீலா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது நான் அவர்கள் இருவரையும் காப்பாற்றினேன். இதற்கிடையில், மீ டூ குற்றச்சாட்டுகளுடன் உடன்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த வகையான சுரண்டல்கள் எல்லா மொழிகளிலும் நடக்கின்றன. மலையாளப் படங்களில் அன்றும் இன்றும் அதிகாரக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சினிமா துறையை ஆள்கிறார்கள். அதிகார குழுவில் மோகன்லால், மம்முட்டி தவிர வேறு யார் இருக்கிறார்கள்? முகேஷ் இருக்கிறார், எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் மோகன்லாலும், மம்முட்டியும் தான் முக்கிய மனிதர்கள்' என்று ஷகீலா கூறியிருக்கிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!