நடிகை ஷில்பா ஷெட்டியின் தாய் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி!

 
ஷில்பா ஷெட்டி தாய்

பிரபல இந்தி திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியின் தாய் சுனந்தா ஷெட்டி, உடல்நலக்குறைவு காரணமாக மும்பையின் பிரபல லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஷில்பா ஷெட்டி தாயைச் சந்திக்க அவசரமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பிரபல புகைப்படக்காரர் *வீரல் பயானி* சமூக வலைதளப் பக்கத்தில், ஷில்பா ஷெட்டி மருத்துவமனைக்கு வரும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பதற்றமடைந்த முகத்துடன் மருத்துவமனைக்குள் நுழையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்தப் பதிவில், “ஷில்பா ஷெட்டி தனது தாய் சுனந்தா ஷெட்டி அனுமதிக்கப்பட்டுள்ள லிலாவதி மருத்துவமனைக்கு அவசரமாக வந்துள்ளார். தாயார் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

சுனந்தா ஷெட்டியின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் மருத்துவமனை வட்டாரங்கள், அவர் தற்போது நிலையாக உள்ளார் என்று தெரிவித்துள்ளன.

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படப் பணிகளிலும் பிஸியாக இருப்பதோடு, தாயின் நலனை பற்றிக் கவலைப்பட்டு அனைத்து பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?