சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகை சிம்ரனின் வீடியோ!

 
சிம்ரன்

சிவப்பு நிறத்தில் சேலை கட்டி நடந்து வரும் வீடியோவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. 

அழகு, நடிப்பு, நடனம், கவர்ச்சி, குரல் என அனைத்திலும் தனித்துவம் காட்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பவர் சிம்ரன். ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் சிம்ரன். 2003-ம் ஆண்டு தீபக் பாகாவை திருமணம் செய்து அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் சிம்ரன் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து பல படங்களில் தனது யதார்த்த நடிப்பினால் திரை உலகில் சிம்ரன் தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழ் சினிமா கொண்டாடி வரும் நடிகைகளில் ஒருவரான சிம்ரன் தற்போது முதன்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்க இருக்கிறார்.இந்நிலையில் சிவப்பு நிறத்தில் சேலை கட்டி நடந்து வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?