செக்ஸ் தொல்லையால் தான் சினிமாவிலிருந்து விலகினேன்... நடிகை சுபர்ணா அதிர்ச்சி பேட்டி!

 
சுபர்ணா

 ஞான் கந்தர்வன்’, ‘வைஷாலி’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை சுபர்ணா ஆனந்த். நான்கு வருடங்கள் மட்டுமே சினிமா துறையில் இருந்தார் எனினும், பல குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், மலையாளப் படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஏற்பட்டதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இது போன்ற கசப்பான அனுபவங்களால் தான் சினிமா துறையை விட்டு தான் விலகியதாக தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை சுபர்ணா. 

சுபர்ணா

ஒரு மலையாள படத்தில் நடிக்கும் போது பலவிதமான அழுத்தம் ஏற்பட்டதாகவும், அதை தாங்க முடியாமல் படத்திலிருந்து விலக நேரிட்டதாகவும் நடிகை சுபர்ணா கூறியிருக்கிறார். நடிகையை பாலியல் ரீதியாக அவமதித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் முகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும், முகேஷ் எம்.எல்.ஏ.பதவியில் நீடிப்பது கேலிக்கூத்தானது என்றும் அவர் கூறியிருக்கிறார். 

சுபர்ணா

இந்த விவகாரத்தில் மூத்த நடிகர்கள் மோகன்லாலும், மம்முட்டியும் மௌனம் காப்பது ஆச்சரியமாக உள்ளது. தவறை தவறு என்று சொல்லும் தைரியத்தை இரண்டு சூப்பர் ஸ்டார்களும் காட்ட வேண்டும் என்று நடிகை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். திரையுலகில் காஸ்டிங் கவுச் போன்ற சம்பவங்கள் காலங்காலமாக நடந்து வருகிறது. தன்னை துன்புறுத்தியவர்களின் பெயர்களை தைரியமாக சொல்லும் நடிகைகளைப் பாராட்டுவதாகவும் நடிகை சுபர்ணா கூறியிருக்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web