திருமண வதந்திக்குப் பதிலளித்த நடிகை திரிஷா: இன்ஸ்டாகிராமில் கிண்டல் பதிவு
தமிழ் திரையுலகில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் உள்ள நடிகை திரிஷா, தனது திருமணத்தைக் குறித்து பரவி வரும் வதந்திகளை கிண்டலாக எதிர்கொண்டுள்ளார். சமீபத்தில், திரிஷாவின் குடும்பம் அவருக்கு வரன் பார்த்து வருவதாகவும், மணமகன் சண்டீகரைச் சேர்ந்த தொழிலதிபர் என்பதுடன், ஆஸ்திரேலியாவில் பல வணிகங்களை நடத்துவதாகவும் சில செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின.

இந்த தகவல்கள் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், நடிகை திரிஷா இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பரவசமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “என்னுடைய வாழ்க்கையைப் பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்” என அவர் எழுதியுள்ளார்.

இவ்வாறு தன்னிடம் பேசாமல் திருமண விவகாரத்தில் வதந்திகளை உருவாக்கும் செயலை நகைச்சுவையுடனும், விவேகத்துடனும் பதிலளித்துள்ளார் திரிஷா. தற்போது இது திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் வைரலாக பரவி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
