”சீமானை கைது செய்ங்க” நடிகை விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!!

 
சீமான் விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் . நடிகை விஜயலட்சுமி மீண்டும் சீமான் மீது கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.  தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார் .நடிகை விஜயலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீமான் தன்னுடன் இருந்ததாகக் கூறி சில புகைப்படங்களை  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சீமானின் ஆதரவாளர்கள் இவரை கடுமையாக விமர்சித்தனர்.  பதிலடி கொடுக்கும் வகையில் சீமான் மீது விமர்சனங்களை முன்வைத்து தனது ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிடுவதும், நேரலையில் பேசுவதுமாக இருந்தார் விஜயலட்சுமி.


 சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் தன்னை சாதி ரீதியிலும், தனிமனித ரீதியிலும் புண்படுத்தும்படி பேசியதாக குற்றம் சாட்டினார்.  சீமான் மீதும் ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  அவர் “என்னால் வாழ முடியவில்லை, என்னுடைய மரணத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சீமானும், ஹரி நாடாருமே காரணம்” எனக் கூறினார்.  இதன் பிறகு திடீரென   மயக்கமடைந்த விஜயலட்சுமி சென்னை அடையார் மலர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்படவே நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கவேண்டும் என   சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்துள்ளார். கண்ணீர் மல்க பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீது 2011ல் புகார் அளித்தது போல் தற்போதும் மீண்டும் புதிதாக புகார் அளித்துள்ளேன். என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான்; நான் சீமானின் மனைவி.

சீமான் விஜயலட்சுமி

அவரால் அவமானப்படுத்தப்பட்டேன்.  காசுக்காகவோ, பணத்திற்காகவோ நான் சீமானுக்கு எதிராக இந்த புகாரை அளிக்கவில்லை. சீமானுக்கு அதிமுக ஆதரவு உள்ளது. திருமணம் செய்து கொள்கிறேன் என சீமான் சமரசம் பேசினார்.  என்னை நீதிமன்றம் செல்லவிடாமல் சீமான் தடுத்துவிட்டார். சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சீமானை கைது செய்யும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். நாம் தமிழர் கட்சியை நடத்துவதால் தனது தம்பிகள் தன்னை பார்த்துக்கொள்வதாக சீமான் கூறுகிறார். நான் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு சீமானின் பதில் என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  நடிகை விஜயலட்சுமியின் இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு பிறகு  பலரும் சீமானுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web